சமீபத்தில் அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது அருள்நிதி நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. பரத் நீலகண்டன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க்கிறது. இந்தப்படத்தின் நடிகர், நடிகையர் பற்றிய அறிவிப்பு வரும் நாட்களில் அவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
ஒரு நடிகரின் மிகப்பெரிய சாதனை என்பது தனக்கென ஒரு தனி எல்லையை வகுப்பது தான். ஒரு சிலர் மாஸ் சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள், வெகு சிலரே வழக்கத்துக்கு மாறான சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். அருள்நிதி இந்த இரண்டையும் மிகச்சரியாக தழுவி, பேலன்ஸ் செய்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது புதுமையான கதை தேர்வில் இந்த படமும் ரசிகரகளுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்பலாம்.