லிங்குசாமி டைரக்ஷனில் சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வெள்ளியன்று வெளியானது. மும்பையை கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தில் ராஜுபாய் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.
படம் வெளியான தினத்தில் இருந்தே படம் நன்றாக இல்லை.. அப்படி இப்படி என பல எதிர்மறையான விமர்சனங்கள் இணையதளத்தில் வெளியாகின. ஆனால் அதை எல்லாவற்றையும் உடைத்தெறிந்துவிட்டது அஞ்சான் வசூல். ஆம்.. இந்த மூன்று நாட்களில் 30 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது ‘அஞ்சான்’.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இதுவரை அதிகம் வசூல் செய்த படங்களின் சாதனையை இந்தப்படம் முறியடித்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சாதனையை செய்துள்ள சூர்யாவுக்கு இந்தப்படத்தின் மூலம் நல்ல ஒப்பனிங் கிடைத்துள்ளது.