சாகசம் திரைப்படத்திற்கு பிறகு இப்போது பிரசாந்த் நடித்துவரும் திரைப்படம் ஜானி. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை பா.வெற்றிச் செல்வன் இயக்குகிறார். இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், தேவதர்ஷினி, சயாஜி ஷிண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர். எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜானி திரைப்படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் நேற்று பிரசாந்தின் யூட்யூப் சேனலில் வெளியிட்டார். இதை தொடர்ந்து பத்திரியாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.
‘ஜானி ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை. 17 விதமான செட்டுகள் போட்டு படமாக்கி இருக்கிறோம்.’ என கூறினார் தயாரிப்பாளர் தியாகராஜன்.
முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஆனந்த்ராஜ் பேசும்போது, சாதாரண ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பதே சுவற்றில் ஒட்டப்படும் பட போஸ்டர்கள் தான். ஆனால் அந்தப்படம் பற்றி வெளியே தெரிவதற்குள் ஒட்டிய மறுநாளே சில அரசியல் கட்சியினர் அதை கிழித்துவிட்டு தங்கள் விளம்பரங்களை வரைகின்றனர். போஸ்டரை பார்த்துவிட்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் மூலம் அரசுக்கு ஜி.எஸ்.டி கிடைக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளின் விளமபரங்களால் என வருமானம் கிடைக்கிறது.. அரசாங்கம் இதை முயற்சி எடுத்து கண்டிக்கவேண்டும்.. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை இதுபோல நடக்க அவர் விட்டதில்லை’ என தனது கோபத்தை கொட்டினார்.