இந்த படத்தில் சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் கௌரவ வேடத்தில் நடித்து தரும்படி ஆனந்த்பாபுவிடம் கேட்டாராம் இயக்குனர் ஜெயக்குமார். அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் நடித்து கொடுத்திருக்கிறார் ஆனந்த் பாபு.
ஜமாய் படத்தில் நவீன், உதய் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக வைஜெயந்தி, நிமிஷா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் டி.பி.கஜேந்திரன், ராதாரவி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கல்லூரி காதல், நடனம், மியூசிக் மூன்றையும் கலந்த கலவையாக இந்த “ஜமாய்” படம் உருவாகி வருகிறது.