‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட உதயநிதி, அடுத்ததாக தற்போது ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.. காமெடிக்கு இந்தமுறை உதயநிதியுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார் கருணாகரன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குட்டிக்கானம் என்கிற பகுதியில் நடந்து வருகிறது. நேற்றுமுன் தினம் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பைக் ஓட்டும் காட்சியில் எமி ஜாக்சன் நடித்தார். அப்போது நிலைதடுமாறி அவர் கீழே விழப்போக, அருகில் இருந்த கருணாகரன் உடனடியாக அவரை விபத்திலிருந்து காப்பாற்றினார்.
இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கருணாகரனுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார் எமி ஜாக்சன். முதல்கட்ட படப்பிடிப்பில் அவரது போர்சன் முடிந்து, எமி கிளம்பிவிட்டாலும் உதயநிதி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படவேண்டி இருப்பதால், மார்ச்-15ஆம் தேதி வரை அங்கே தான் முகாமிட்டுள்ளனர் படக்குழுவினர்.