“என் வழி இனி அஜித் வழி” ; ஹாலிவுட் நடிகை அமிலா….!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆக-24ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்திருப்பது ஸ்பெஷல் என்றால், ஹாலிவுட் படங்களில் நடித்த அமிலா டெர்ஜிமெஹிக் என்பவரும் நடித்துள்ளது இன்னொரு ஸ்பெஷல்.. ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் சில படங்களில் நடித்தாரே பியர்ஸ் பிராஸ்னன், அவர் கதாநாயகனாக நடித்த ‘தி நவம்பர் மேன்’ படத்தில் அமிலா செய்திருந்த கதாபாத்திரத்தை பார்த்த இயக்குனர் சிவா, ‘விவேகம்’ படத்தில் நடிக்க அமிலாவை அழைத்து வந்துள்ளார்.

இந்தப்படத்தில் அஜித்தின் ‘கவுண்டர் டெரரிஸ்ட் ஸ்க்வாட்’ அணியின் ஒரு அங்கமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமிலா. “ ‘விவேகம்’ போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த சர்வதேச படத்தின் மூலம் இந்திய சினிமாவில் நான் கால் பதிப்பது எனக்கு பெரிய பெருமை. அஜித் எவ்வளவு பெரிய நட்சத்திரம்.. ஆனால் சந்தித்தபொழுது துளி கூட தலைக்கனம் இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகினார்.

எல்லா ஆபத்தான சண்டை கட்சியையும் டூப் வேண்டாம் என்று தானே செய்து அசத்தினார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும் பாசிட்டிவிட்டியும் உள்ளது . எனது சினிமா வாழ்க்கையும் இந்த உலகத்தையும் அவரது கண்ணோட்டத்திலேயே கண்டு, வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதில் அவருக்கு நிகர் அவரே.” என அஜித் புகழ் பாடுகிறார் அமிலா.

‘விவேகம்’AjithAmilaVivegamஅஜித்அமிலாசிவா