‘பாபா சாகேப்’ ஆக உருவாகும் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு..!


ஹாலிவுட்டில் ரிச்சர்டு அட்டன்பரோ என்ற இயக்குநர் மகாத்மா காந்தியின் வாழ்கையை திரைப்படமாக எடுக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேசத்தலைவரின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்ககூடாது என அஜய்குமார் என்பவர் எண்ணியதன் வெளிப்பாடுதான் இப்போது ‘பாபா சாகேப்’ என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது..

இந்தப்படத்தில் நடிக்க, அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தினார்களாம். ஆனால் எதிரபார்த்தபடி ஒருவரும் கிடைக்கவில்லை. இறுதியாக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் மோகன் என்பவர், ஆய்வுக்கூடம் திரைப்படத்தின் நாயகன் ராஜ கணபதியை அறிமுகம் செய்து வைத்தாராம். தோற்றத்தில், அச்சு அசல் பாபா சாகேப் போல இருந்ததால் அவரையே தேர்வு செய்து நடிக வைத்துள்ளார்களாம்.

ஏன் கமர்ஷியல் படம் எடுக்காமல், அம்பேத்கர் வரலாற்றை இயக்குகிறார் அஜய்குமார்..? தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்கையை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகிறது, நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன்” என பொட்டில் அடித்த மாதிரி பதில் வருகிறது அஜய்குமாரிடமிருந்து. மேலும், இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத்தலைவரின் படம் என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.

AmbethkarBaba Sagepஅம்பேத்கர்பாபா சாகேப்