கடந்த 1999ல் அஜித்தின் 25வது படமாக வெளியானது ‘அமர்க்களம்’.. சரண் இயக்கிய இந்தப்படத்தில் அஜித் ஜோடியாக ஷாலினி நடித்ததும், அந்தப்படத்தில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து, பின்னர் திருமண பந்தமாக மாறியதும் வரலாறு.. அதனால் அஜித்துக்கும் அஜித் ரசிகர்களுக்கும் அமர்க்களம் எப்போதுமே ஸ்பெஷலான படம் தான்..
எம்.ஜி.ஆர், ரஜினியின் பழைய ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி மீண்டும் திரையிடுவது போல அஜித்தின் ‘அமர்க்களம்’ படத்தையும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளார்கள்.. வரம் மே-1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக இந்தப்படத்தை வரும் ஏப்-28ல் ரிலீஸ் செய்கிறார்கள்..