டபுள் ஆக்ஷன் ரோலில் அமலாபால்..!


நடிகர்களுக்கு இருப்பதைப் போலவே நடிகைகளுக்கும் சில கேரக்டர்களில் நடித்துவிட வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். ஒன்று போலீஸ் அதிகாரியாக.. மற்றொன்று டபுள் ஆக்ஷன் ரோல்.. இந்த இரண்டு ஆசைகளையும் தனது சினிமா வாழ்நாளுக்குள் நிறைவேற்றிக்கொண்ட நடிகைகள் வெகுசிலரே.. கடந்த வருடம் பிரியாமணிக்கு ‘சாருலதா’ படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தது.

அந்த வகையில் அமலாபாலை அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும்.. தலைவா படத்தில் (பெயரளவுக்கு என்றாலும் கூட) போலீஸ் அதிகாரியாக நடித்தவருக்கு, இப்போது டபுள் ஆக்ஷன் ரோலிலும் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது இயக்குனர் சமுத்திரக்கனி மூலமாக.

ஆம். ‘நிமிர்ந்து நில்’ படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கும் கிட்ணா என்ற படத்தில் மீண்டும் அமலாபால் தான் கதாநாயகி.. அதிலும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கிராமங்களில் கிருஷ்ணன் என்கிற பெயர் கொண்டவர்களை மரியாதை நிமித்தமாக ‘கிட்ணா’ என்று அழைப்பார்களாம்.

அதையே தனது படத்தின் தலைப்பாக வைத்துள்ள சமுத்திரக்கனி, படத்தை தயாரித்து இயக்குவதோடு கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். ஆனால் படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. அமலாபால் சமுத்திரக்கனியின் மகளாக நடிக்கிறார். காட்டுக்குள்ளேயே நடக்கும் த்ரில்லர் கதையாக இது உருவாக இருக்கிறது.

Amala PaulDeiva ThirumagalEesanMynaNadodigalNimirunthu NilPoraliSamuthirakaniSindhu SamaveliSubramaniapuramThalaivaaVellai Illa PattathaariVettai
Comments (1)
Add Comment
  • https://pin-up.pinup1909.ru/

    458443 808349This style is spectacular! You naturally know how to keep a reader amused. Between your wit and your videos, I was almost moved to start my own weblog (nicely, almostHaHa!) Wonderful job. I actually enjoyed what you had to say, and a lot more than that, how you presented it. Too cool! 817759