“எல்லாரும் என் காதலை வச்சு காமெடிதான் பண்றீங்க” – உருகும் சிம்பு..!

 

இன்று காதலர் தினம்.. காதலர்கள் எல்லோரும் சந்தோஷமாக ஜோடியாக உலாவரும் நாள். ஆனால் நம்ம சிம்பு..! அவரது முந்தைய காதலை பற்றி பலரும் பலவிதமாக பேச, அவரோ, “எல்லாரும் என் காதலை வச்சு காமெடிதான் பண்றீங்க.. ஆனால் என்னோட பீலிங் எனக்கு மட்டும் தான் தெரியும்” என சென்டிமென்ட்டாக உருகுகிறார்..

இது எப்ப நடந்துச்சு.. எப்ப அவர் சொன்னார் என க்ராஸ் கேள்விகள் வேண்டாம். அவர் வாயாலே, அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் சொன்னது பாண்டிராஜ் டைரக்சன்ல அவர் நடித்துள்ள இது நம்ம ஆளு’ படத்துல. ஆமாங்க.. காதலர் தினத்தை முன்னிட்டு ‘இது நம்ம ஆளு’ படத்தோட மேக்கிங்ல நடந்த கலாட்டாக்களை ஒரு ரெண்டு நிமிஷ வீடியோவா வெளியிட்டிருக்காங்க.. அதுல சிம்பு பேசுற டயலாக் தான் இது.

இந்த வீடியோவில் சிம்புவும் நயன்தாராவும் செல்லமாக அடித்துக்கொள்வது, சமையலறையில் ரொமான்ஸ் பண்ணுவது என ஷூட்டிங் ஸ்பாட்டில் யதார்த்தமாக நடைபெற்ற அவர்களது கலாட்டாக்களை பார்க்கும்போது இதுவா ஒரு காலத்தில் காதலில் பிரிந்த ஜோடி என ஆசார்யப்படாமல் இருக்க முடியவில்லை..

அந்த அளவுக்கு நடிப்பில் இருவரும் அன்னியோன்யம் காட்டியுள்ளார்கள்.. அதற்கேற்ற மாதிரி காலமும் அவர்களை பக்குவப்படுத்தியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த கலாட்டகளை வீடியோவாக்கிய இயக்குனர் பாண்டிராஜ், அதை தனது படத்திற்கு பப்ளிசிட்டியாக மாற்றியிருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.

இது நம்ம ஆளுகாதலர் தினம்சிம்புநயன்தாராபாண்டிராஜ்