இன்றைய சூழலில் சினிமாவுக்குள் நுழையவேண்டும் என்றால் அதற்கு நுழைவுச்சீட்டாக இருப்பது குறும்படங்கள் தான்.. அதுமட்டுமல்ல, குறும்படம் எடுப்பது நண்பர்கள் மத்தியில் தங்களது கௌரவத்தை உயர்த்தம் என்றும் பலர் நினைக்கிறார்கள். இப்படி குறும்படம் எடுக்கப்போய் சிக்கலில் மாட்டிக்கொண்ட நால்வரின் கதையை ‘எமோஜி’ என்கிற திரைப்படமாகவே தயாரித்திருக்கிறார் பிரபல படத்தொகுப்பாளரான பீட்டர் பாபியா.
இவர் பூமணி படத்தின் மூலம் எடிட்டராகி, கமலின் ஆளவந்தான், சதிலீலாவதி, புதுமைப்பித்தன், கள்ளழகர், டிஸ்யூம், ரோஜா கூட்டம், கலாபக்காதலன், காத்தவராயன், உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர்.
இந்தப்படத்திற்கும் லயோலா கல்லூரி மாணவர்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. இந்த படத்தில் ஜித்து, சதீஷ், சிவநேசன் ஆகிய மூவரும் நாயகர்களாகவும் சாய் நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் நால்வருமே லயோலா கல்லூரி மாணவர், மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டெக்னிக்கல் மற்றும் கதை, திரைக்கதை விஷயங்களை கவனிப்பவர்கள் கீதா, ஜபா, வேணி மூவரும். படத்தை இயக்குபவர் வெங்கட்.. படம் சம்மந்தப்பட்ட எல்லோருமே லயோலாவில் படிக்கும் மாணவர்கள்.
ஷார்ட் பிலிம் எடுக்க நினைக்கும் நான்கு இளைஞர்கள் அவர்களின் குறிக்கோள் அதிகப்படியான லைக்குகளை அள்ள வேண்டும் என்பது தான். அதற்கு என்ன வழி என்று யோசிகிறார்கள்…முக்கிய பிரமுகர் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை கதைக் கருவாக்குகிறார்கள். பிரச்னையின் வீரியம் தெரியாமல் தொட்ட அந்த விஷயம் எப்படி விபரீதமானது ..அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பதுதான் கதைகரு