எமியுடன் ‘ஆக்கோ’ படத்திற்காக டூயட் பாடும் அனிருத்..!

இன்னும் ஹீரோ ஆகவில்லை.. ஆனால் எமி ஜாக்சனுடன் டூயட் பாடுகிறார் இசையமைப்பாளர் அனிருத்.. இது எப்டி இருக்கு..? அறிமுக இயக்குனர் ஷாம் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் தயாராகி வரும் ‘ஆக்கோ’ படத்தில் தான் இந்த கலாட்டா. இந்தப்படத்தில் ‘எனக்கென யாரும் இல்லையே” என்ற பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.

இந்த பாடல் காதலியின் அன்புக்காக ஏங்கும் ஒரு இளைஞனின் ஏக்கத்தை பற்றிய பாடல். அதனால் இந்தப்பாடலுக்கு இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாய் இருக்கும் அனிருத் மற்றும் அனைவரையும் காதல் கொள்ள தூண்டும் எமி ஜாக்சன் இருவரையும் நடிக்க வைக்கிறார்களாம். ம்ம்.. அனிருத்துக்கு மச்சம் தான்.

அனிருத்எமி ஜாக்சன்