வேதாளம் படம் தீபாவளிக்கு வெளியாவதற்கான அனைத்து வழிகளும் க்ளியர் ஆகிவிட்டது. இந்தப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதன்முறையாக நடித்துள்ள சூரிதான் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் இருக்கிறார். காரணம் இந்தப்படத்தில் அஜித்துடன் சண்டை போட்டுள்ளாராம் சூரி.. இதனால் அஜித் ரசிகர்களிடம் திட்டு கிடைக்குமோ என்பதுதான் அவரது டென்சனுக்கு காரணம்..
உங்களுக்கு படத்துல டாமினேட்டான கேரக்டர். அஜித் சார்கூட சண்டைபோடுற மாதிரியெல்லாம் இருக்கும் என இயக்குனர் சிவா சூரியின் போர்ஷன் பற்றி சொல்லும்போதே ஜெர்க் ஆனாராம் சூரி . ‘தலகூட சண்டை போடுறமாதிரி இருக்கே சார். நான் பண்ணமாட்டேன்’னு ரொம்ப பயந்தாராம். காரணம் அந்தளவுக்கு அவரும் பயங்கரமான அஜித் ரசிகர் தான்… ஆனால் “அஜித் சார்தான், ‘வாங்க சூரி… அதெல்லாம் ஒண்ணுமில்லை’னு என்கரேஜ் பண்ணி பண்ணவெச்சார். அது நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு” என்கிறார் சிவா.