பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக நடித்து வருகிறார். வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் – இயக்குநர் சிவா இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்தப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
நேற்று அஜித்தின் பிறந்தநாளை முனிட்டு, தானும் அஜித்தும் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விவேக் ஓபராய், “அஜித் அன்னா.. நீங்கள் மறக்க முடியாத ஒரு மனிதர்.. உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.