அஜித்துடன் கல்லூரிக்கு கிளம்பிய லட்சுமி மேனன்..!

வீரம் படத்தை தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல-56’ படத்தின் படப்பிடிப்பு இப்போது கல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, அஜித்தின் தங்கையாக ஆனால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் லட்சுமி மேனன்.

இந்தப்படத்திலும் அஜித்துக்கு சால்ட் அன்ட் பேப்பர் லுக் தான். கொல்கத்தாவில் டாக்சி ஓட்டுபவராக அஜித் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் லட்சுமி மேனன் பேக்குடன் கல்லூரிக்கு கிளம்ப, கையில் ஒரு நோட்டை வைத்துக்கொண்டு அஜித் அவரை அழைத்துச்செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் லட்சுமி மேனன்.

அதுமட்டுமல்ல இரண்டு தினங்களுக்கு முன் வந்த தனது பிறந்தநாளுக்கு கூட, ஷூட்டிங்கிற்கு லீவு போடாமல் அஜித்துடன் படப்ப்பிடிப்பிலேயே பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளார் லட்சுமிமேனன்.

அஜித்லட்சுமி மேனன்ஸ்ருதிஹாசன்