தீபாவளி தியேட்டர் புக்கிங் – க்யூவில் நிற்கும் படங்கள்

சில வருடங்களுக்குப் பிறகு, இந்த வருட தீபாவளி ரசிகர்களுக்கு உண்மையிலேயே விருந்து படைக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை. இத்தனைக்கும் ரஜினி,கமல் படங்களும் ரிலீஸாகவில்லை. விஜய் படமும் கூட இந்தப்பட்டியலில் இல்லை. ஆனால் அஜீத் இருக்கிறார். தம்பி கார்த்தி இருக்கிறார். கூடவே விஷாலும் ஆர்யாவும் தீபாவளி தினத்தில் உங்களை சந்திக்க இருக்கிறார்கள்.

ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டியநாடு, செல்வராகவனின் இரண்டாம் உலகம். என இந்த நான்கு படங்கள் போதாதா தீபாவளியை களைகட்ட வைப்பதற்கு? நான்கு படங்களுமே பெரிய படங்கள் என்பதால் தியேட்டர் பிடிப்பதில் தள்ளுமுள்ளு இருக்கத்தானே செய்யும்? ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்காக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நிறைய தியேட்டர்களை வளைத்துப் போட்டுவிட்டது என்றும் அதனால் ஆரம்பம் படத்துக்கு தியேட்டர்கள் குறைவாகவே கிடைத்திருக்கின்றன என்றும் ஒரு பக்கம் தகவல்கள் பரவ ஆரம்பித்தன.

ஆனால் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியும் விதமாக தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள தியேட்டர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது ஆரம்பம் படக்குழு. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் ஆரம்பம் வெளியாகிறது. விரைவில் இரண்டாம் கட்டத்தில் உள்ள தியேட்டர்களின் பட்டியலையும் வெளியிட இருக்கிறார்கள். இந்தப்போட்டியில் பாண்டிய நாடும் இரண்டாம் உலகமும் என்னவிதமான அஸ்திரங்களை உபயோகிக்கப் போகின்றன என்பது போகப்போகத்தான் தெரியும்.

Comments (1)
Add Comment
  • รักษาสิว

    541066 856946Woh I like your content , saved to favorites ! . 808816