ஜெயம் ரவியின் ‘மிருதன்’ ரைட்ஸை கைப்பற்றியது ஐங்கரன்..!


நாய்கள் ஜாக்கிரதை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜனின் டைரக்சனில் ஜெயம் ரவி ‘மிருதன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அல்லவா..? ஹிட் கொடுத்த இரண்டு பேர் இணைந்திருக்கும் படம் என்பதாலேயே ‘மிருதன்’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூடவே கதாநாயகியாக் அனடிக்கும் லட்சுமி மேனனின் வேதாளம் வெற்றி செண்டிமெண்டும் இப்போது சேர்ந்துள்ளது.

தற்போது இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.. ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தை தயாரித்து, அவரின் நடிப்பு பயணத்தில் புதிய மாற்றத்தை கொடுத்த நிறுவனத்தின் கைகளுக்கு ‘மிருதன்’ சென்றுள்ளதால் மிருதனின் ரீச் இன்னும் அதிகமாகும் வாய்ப்பு தானாகவே உருவாகியுள்ளது. பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தையும் ஐங்கரன் நிறுவனம் தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

AiyngaranJeyam RaviMiruthanSakthi Sountharajan