சினிமா கலைஞர்களை பொறுத்தவரை நமது நாட்டில் வழங்கப்படும் உயரிய விருது என்றால் அது தேசிய விருது தான்.. வருடந்தோறும் வழங்கப்படும் இந்த விருது, ஒரு சில துறைகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்பதும். குறிப்பாக நிஜ ஹீரோக்களான சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதும் அந்த கலைஞர்களை ரொம்ப வருடங்களாக வருத்தத்தில் வைத்திருக்கின்றன..
சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஐஸ்வர்யா தனுஷ் இந்த பாகுபாட்டை களையும் விதமாக, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
ஐஸ்வர்யாவின் இந்த செயலால் ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐஸ்வர்யா தனுஷ்ஸ்டண்ட் கலைஞர்களை பற்றி ‘சினிமா வீரன்’ என்கிற ஆவணப்படம் ஒன்றையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.