அப்பாடா.. ஒருவழியா டான்ஸ் ஆடிட்டார் ஐஸ்வர்யா..!


இப்போதும் கூட எந்த சேனலை திருப்பினாலும் ‘ரம்மி’ படத்தில் விஜய்சேதுபதியும் ஐஸ்வர்யாவும் பாடுகின்ற அற்புதமான மெலடியான ‘கூட மேல கூட வச்சு’ பாடலை பார்க்காம இருக்கிறதுக்கான வாய்ப்பு ரொம்பவே குறைவுதான். ஆனா அந்தப்பாட்டுல பார்த்தீங்கன்னா.. ஐஸ்வர்யா நிற்பார்.. நடப்பார்.. உட்காருவார்.. அவ்வளவுதான் அவருடைய மூவ்மெண்ட்ஸ்..

முறையாக டான்ஸ் கற்று, சின்னத்திரையில் நடனப்போட்டிகளில் வெற்றிபெற்ற ஐஸ்வர்யாவுக்கு தான் இதுவரை நடித்த படங்களில் எல்லாம் நடனம் ஆடவே வாய்ப்பு இல்லாததால் ரொம்பவே வருத்தத்தில் இருந்தார். அந்த வருத்தம் இப்போது ‘திருடன் போலீஸ்’ படம் மூலமாக தீர்ந்துள்ளது. இந்தப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு ஆடியிருக்கிறார் ஐஸ்வர்யா.

AishwaryaDineshIshwaryaIshwarya RajeshKooda Mela Kooda VechuRummyThirudan Policeஐஸ்வர்யாகூட மேல கூட வச்சுதிருடன் போலீஸ்விஜய்சேதுபதி