தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ‘கபாலி’ நாயகி..?

ஷாக்காக வேண்டாம்.. இதற்கு முன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘குட்டி’ ஆகிய படங்களில் ஸ்ரேயா, ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாரா என ரஜினியின் ஜோடிகளுடன் அவரது மாப்பிள்ளை தனுஷ் இணைந்து நடிப்பது புதிதல்ல. அதனால் ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றால் அதற்காக ஆச்சர்யப்பட தேவையில்லை..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் இல்லையா..? அந்தப்படத்தில் தான் ராதிகா ஆப்தே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.. ‘கபாலி’ மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக நுழைந்த ராதிகா ஆப்தே அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக களமிறங்குவார் என்று நம்பலாம்.

DhanushKabaliRadhika Apteகபாலிதனுஷ்ராதிகா ஆப்தே