சும்மா டைட்டிலுக்காக வலியவன்’ என போட்டுக்கொண்டால் போதுமா.?. படத்தின் தலைப்புகேற்றவாறு தன்னை காண்பிக்கவும், படத்தின் கேரக்டருக்கு தேவைப்பட்டதாலும் ஹாங்காங்கில் இருந்து ஒரு சிறப்பு உடற்பயிற்சியாளரை வரவழைத்து அவரின் வழிகாட்டுதலின் பேரில் மிகவும் சிரமப்பட்டு உணவு பழக்கவழக்கங்களை மாற்றி அதன் மூலம் தன் உடலை மெருகேற்றி சிக்ஸ்பேக் வரவைத்துள்ளார் ஜெய்.
அதுமட்டுமல்ல.. படத்தில் தனது கதாபாத்திரத்துடன் அவர் ஒன்றிப்போனதால் இந்தப்படத்தில் தனது டப்பிங்கையும் தொடர்ந்து 24 மணிநேரத்தில் பேசி முடித்துள்ளார் ஜெய். இதற்கு முன் கவுண்டமணி தான் நடித்துள்ள ‘வாய்மை’ படத்திற்காக தொடர்ந்து 17 மணி நேரம் டப்பிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.