‘த்ரிஷ்யம்’.. அடுத்து ‘மிஸ்டர் பிராடு’.. தொடர் ரீமேக்கில் ரவிச்சந்திரன்..!

 

மோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்த விஷயம் நமக்கு தெரியும். இதில் கதாநாயகனாக ரஜினியுடன் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ படத்தில் நடித்தாரே, அந்த ரவிச்சந்திரன் தான் நடித்திருந்தார். பி.வாசு படத்தை இயக்கியிருந்தார்.

படம் அங்கே சூப்பர்ஹிட்டாகவே, மோகன்லால் படங்களின் மீது தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் ரவிச்சந்திரன். அந்த வகையில் இப்போது அடுத்ததாக மோகன்லால் நடித்த ‘மிஸ்டர் பிராடு’ என்கிற படத்தையும் கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க இருக்கிறார் ரவிச்சந்திரன்.

த்ரிஷ்யம்நாட்டுக்கு ஒரு நல்லவன்பி.வாசுமிஸ்டர் பிராடுமோகன்லால்ரவிச்சந்திரன்