ரஜினி நடித்த ‘அவள் அப்படித்தான்’ படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதே ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தில் ராதிகாவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்தவர்ர் தான் சித்ரா. சரத்குமாரின் தங்கையாக சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் இன்னும் பிரபலமான இவர், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம், நினைவுச்சின்னம் உட்பட தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 300 படங்கள் நடித்துவிட்டார்.
ஆனாலும் இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தின் தான் மக்களிடம் இன்னும் பிரபலமானார். அதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது சுமார் 18 வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க இருக்கிறார் சித்ரா..
இவ்வளுவு நாள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்ததர்கான காரணத்தை அவரே கூறுகிறார்.. “எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன்.. இப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன். மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்” என்கிறார் சித்ரா.