ஆதித்யாராம் ஸ்டுடியோ நிறுவனருக்கு பெஸ்ட் ரியாலிட்டி பிராண்ட் விருது..!

திரையுலகினரின் ஆபத்பாந்தவனாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் ஆதித்யாராம் என்கிற மிகப்பெரிய ஸ்டுடியோ அமைந்துள்ளது தெரியும் தானே.. எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய சர்வேயில் இதன் நிறுவனர் ஆதித்யாராமுக்கு ‘பெஸ்ட் ரியாலிட்டி பிராண்ட் அவார்டு’ வழங்கப்பட்டுள்ளது.. இந்த ஸ்டுடியோவின் சிறப்பே 1௦ மற்றும் 15 ஏக்கர் என மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் இரண்டு படப்பிடிப்பு தளங்கள் இதனுள் அடங்கியிருப்பது தான்.

கமல் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் வரலாற்று கால கோவில் செட் இங்கேதான் அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் செட்டும் இங்கே தான் அமைக்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பின்போது பல நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

‘புலி’"தசாவதாரம்"பெஸ்ட் ரியாலிட்டி பிராண்ட்