சிவராஜ்குமார் படத்தின் மூலம் கன்னடத்தில் நுழைந்தார் வித்யா..!


அதிபர், சைவம் ஆகிய படங்களில் அடடே யார் இந்த பெண், களையாக இருக்கிறாரே என கவனிக்க வைத்து, அடுத்ததாக ‘பசங்க-2’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் பளிச்சென்று பதிந்தவர் தான் நடிகை வித்யா.. தற்போது தமிழிலும் மலையாலத்திலுமாக ஐந்து படங்களுக்கு குறையாமல் பிஸியாக நடித்துவரும் வித்யா, கன்னட திரையுலகிலும் தனது முதல் அடியை வலுவாக எடுத்து வைத்துள்ளார்..

ஆம். கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் ‘சன் ஆப் பங்கரதா மனுஷ்யா’ என்கிற படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் வித்யா. இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், மே மாதம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் வித்யா.. இந்தப்படத்தில் அவருக்கு மிகவும் தைரியமான பெண் கேரக்டராம்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வித்யா பெங்களூருவில் பிறந்தவர் என்றாலும் கூட கன்னடம் அவ்வளவு சரளமாக பேச வராதாம். சிவராஜ்குமார் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததும் சந்தோஷத்துடன் கொஞ்சம் டென்ஷனும் ஏற்பட்டதாம் வித்யாவுக்கு.. நான்கைந்து பக்க வசனங்களை கொடுத்து அதை உருப்போட சொன்னார்களாம். வித்யா அதை சரியாக செய்துமுடிக்கவே, படக்குழுவினருக்கு ரொம்பவே திருப்தியாகிவிட்டதாம்.

Vidhyaசன் ஆப் பங்கரதா மனுஷ்யாசிவராஜ்குமார்பசங்க-2வித்யா