‘தாரை தப்பட்டை’ படம் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபின் வரலட்சுமியை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்தவகையில் தற்போது வரலட்சுமி நடிக்கும் புதிய படம் சக்தி’. இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராகி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி.
காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடி, மர்மம், திரில்லர் கலந்த இந்தப்படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமியை தேர்வு செய்துள்ளார்கள். இந்தப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடிக்கிறார் வரலட்சுமி. அவரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது. சென்னையில் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து நடைபெற உள்ளது.