வரலட்சுமி தான் இந்த ஆண்டின் பிசியான நடிகையாகவும், அதிக படங்களில் நடித்த நடிகையாகவும் இருக்கப்போகிறார் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அந்தவகையில் தற்போது வெல்வெட் நகரம் என்கிற படத்தில் தொடர்ந்து நடித்துவருகிறார் வரலட்சுமி..
மனோஜ் கே.நடராஜன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தை மேக்கர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. சரியாக வரலட்சுமியின் பிறந்தநாளன்று இதன் படப்பிடிப்பை துவங்கியுள்ளார்கள். அன்றைய தினம் நீலாங்கரையில் உள்ள ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தில் இருந்து பல குழந்தைகளை அழைத்து வந்து மகளுடன் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் வரலட்சுமியின் தந்தை சரத்குமார்.