வெள்ள நிவாரணத்திற்காக ஒரு லட்சம் தந்தார் ஷோபனா..!

இனம், மொழி பாராமல் திரையுலக நட்சத்திரங்கள் தம்ழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை பொருளாகவும், பணமாகவும் அளித்து வருகின்றனர்.. நடிகை ஷோபனாவும் தனது பங்களிப்பாக ஒரு லட்ச ரூபாயை, நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

இந்த வருடம் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி நாளை முதல் கோலாகலமாக துவங்க இருக்கிறது. நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்சிக்கான துவக்கவிழாவின்போது இந்த தொகையை வழங்கிய ஷோபனா, “மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் இசை நிகழ்ச்சியா என நினைக்க வேண்டாம். இதன்மூலம் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்க இருக்கிறோம்” என கூறியுள்ளார்.

ChennaiChennai Flood ReliefShobana