ஜி.என்.ஆர் குமாரவேலன் டைரக்சனில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘வாஹா’. ராணுவ பின்னணியில் காதல் கலந்து உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இசைவெளியீட்டு விழாவையும் நடத்திவிட்டார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரின் உறைபனியில் எடுக்கப்பட்டு இருக்கின்றனவாம்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளவர் ரன்யா.. காஷ்மீரில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணாக நடிக்கிறார். ‘வாஹா’ படத்தை பொறுத்தவரை இவருக்கு பல கட்ட சோதனைகளுக்கு பிறகே அந்தப்படத்தின் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது என அவரே கூறுகிறார்..
முதலில் போட்டோவை பார்த்து ஒகே பண்ணிய இயக்குனர் குமாரவேலன், அடுத்ததாக மேக் அப் டெஸ்ட் வைத்தாரம்,.. அதிலும் ஓகேயாகிவிட விக்ரம்பிரபுவுடன் இவரது கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க் அவுட் ஆகும் என பார்ப்பதற்காக இருவருக்கும் சேர்த்து நடத்திய ஸ்கிரீன் டெஸ்ட்டிலும் இவர் பாஸாகி விட்டாராம்..
ஆனால் அப்பாடா என பெருமூச்சு விடமுடியவில்லையாம். காரணம் வசன உச்சரிப்பு.. ஆனாலும் இயக்குனர் எதிர்பார்த்தபடியே வசனங்களை தெளிவாக மாடுலேஷன்களுடன் உச்சரிக்க, வாய்ப்பு இவருக்கே உறுதியானதாம். இருந்தாலும் இத்தனை டெஸ்ட்டுகள் எடுக்கப்பட்டபோதே இந்தப்படத்தில் தான் நடிப்பது உறுதியாகிவிட்டது என நம்பிக்கை வந்துவிட்டதாம் ரன்யாவுக்கு.. படப்பிடிப்பின் போது விக்ரம் பிரபுவும் மற்றும் உதவி இயக்குனர்களும் ரம்யாவிற்கு தமிழ் ஆசிரியர்களாக மாறியதால், நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் பின்னி பெடலெடுத்து இருக்கிறாராம் ரன்யா.