திறமையான நடிகை, இயக்குனர், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பதற்கென்றே சில கேரக்டர்கள் உருவாக்கப்படுகின்ற அளவுக்கு யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரர். அதனால் மலையாள சினிமாவிலும் இவரை அழைத்ததில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது..?
மலையாள இளம் இயக்குனர் வினீத் சீனிவாசன் இயக்கியுள்ள ஜேகப்பிண்டே சுவர்க்க ராஜ்யம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் நிவின்பாலிக்கு அம்மாவாக நடித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.. பல வருடங்களுக்கு முன் லோகித தாஸ் இயக்கத்தில் ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இது மலையாளத்தில் இரண்டாவது என்ட்ரி..