விவேக்கை மீளா துயரத்தில் ஆழ்த்திசென்ற மகன்..!


அனைவரையும் தங்களது சோகங்களை மறந்து தனது நகைச்சுவையால் சிரிக்கவைத்த சின்னக்கலைவாணர் விவேக்கை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார் அவரது மகன் பிரசன்ன குமார். ஆம் கடந்த சில நாட்களாகவே மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 13 வயதே நிரம்பிய அவரது மகன் நேற்று நினைவு திரும்பாமலேயே மரணத்தை தழுவி, அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்றவிட்டார்.

திரையுலகினரும் சுற்றத்தாரும் விவேக்கிற்கு தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துவருகின்றனர். மகனை இழந்து வாடும் விவேக் மற்றும் அவரது குடும்பத்திற்கு நமது behindframes சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, மேலும் இறைவன் அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் தரட்டும் என்றும் பிரார்த்தனை செய்வோம்.

Prasanna kumarVivek