“தலைமகனே கலங்காதே.. தனிமை கண்டு மயங்காதே” என அருணாச்சலம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பாட்டு எழுதியவர் கவிஞர் காளிதாசன்.. கிட்டத்தட்ட கடந்த 25 வருட காலத்துக்கும் மேலாக சினிமாவில் பாட்டெழுதி வருகிறார். இப்போது இப்போது உடல் நலக்குரைபாடால் அவதிப்பட்டு வருகிறார்..
அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளக்கூட வசதியின்றி வறுமையில் வாட்டும் செய்தி நடிகர் விஷாலுக்கு தெரியவந்தது.. உடனே தான் நடத்திவரும் தேவி அறக்கட்டளை மூலமாக காளிதாசனின் சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி சிகிச்சையை மேற்கொள்ள வழிவகை செய்துள்ளாராம்.