‘ஜல்லிக்கட்டு’ விஷயத்தில் விஷால் கருத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு..!


கிட்டத்தட்ட பொதுவாழ்க்கையில் இறங்கும் விதமாகத்தான் இருக்கிறது விஷாலின் நடவடிக்கைகளும் அதற்கு கிடைத்துவரும் பலமான எதிர்ப்பு ரியாக்சன்களும். தஞ்சாவூரில் நிலம் வாங்கி விவசாயம் பண்ணப்போகிறேன் என விஷால் சொன்னால், இவருக்கு ஏன் இந்த வேலை.. விவசாயத்தை பற்றி இவருக்கு என்ன தெரியும் என யாரோ சிலர் கொடி பிடிக்கிறார்கள்..

சில தினங்களுக்கு முன் தமிழக கவர்னர் கையால், ‘விலங்கு நேசிப்பாளர்’ விருது பெற்ற விஷால், அந்த இடத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை வரவேற்கத்தக்கது என பேசிவிட்டார். இது போதாதா தீவிர தமிழ் ஆதரவாளர்களுக்கு..?

இதுதொடர்பாக தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழக ஒருங்கி ணைப்பாளர் டி.ராஜேஷ் என்பவர், “ஜல்லிக்கட்டு தடை தொடர்பான தனது கருத்துக்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவரது உருவபொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என டாப் கியரில் பாய தயாராக இருக்கிறார். போகிறபோக்கை பார்த்தால் பொது மேடைகளில் விஷால் மௌன சாமியாராகவே இருந்து விடுவதுதான் நல்லதோ என தோன்றுகிறது.

D RajeshJallikattuVishalஜல்லிக்கட்டுவிஷால்