நடிகர்சங்க தேர்தலில் விஷால் தீவிரமாக களம் இறங்க முக்கிய காரணங்களில் ஒன்று பொதுச்செயலாளராக இருந்த ராதாரவியின் அவமதிப்பான வார்த்தைகள் தான். அதனால் தான் தேர்தலில் நிற்கும்போது கூட ராதாரவிக்கு எதிராக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக சவால் விட்டு, அதில் வென்றும் காட்டியுள்ளார்.. தற்போது சங்கத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள நாசர் அணியினர் எதிரணியினருடன் இணக்கமான போக்கையே கடைபிடிக்க விரும்புகின்றனர்…
இவர்கள் அவர்கள் படங்களில் இணைந்து நடிப்பார்களா என்கிற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொம்பன் முத்தையா இயக்கத்தில் விஷால் அடுத்து நடிக்கவுள்ள ‘மருது’ என்கிற படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதன்மூலம் பகைத்தீயை மேலும் வளரவிடாமல் அணைக்கும் முயற்சியில் விஷால் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கது.