சினிமாவில் இன்னும் இளைஞராகவே காதல் டூயட் பாடிக்கொண்டு இருக்கும் விக்ரம் விரைவில் மாமனார் ஆகப்போகிறார் என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. ஆம் விக்ரம் தனது மகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கப்போகிறார். மணமகன் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் என்பதுதான் சிறப்பே..
விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், மனு ரஞ்சித் என்பவருக்கு ஜூலை 10ம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெற இருக்கிறது. மணமகன் மனு ரஞ்சித், கலிஞரின் மகனான மு.க.முத்துவின் பேரன் ஆவார். இந்த நிச்சயதார்த்த விழாவில் இரு குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 2017ம் ஆண்டில் தான் திருமணம் நடைபெற இருக்கிறது.