நிவின்பாலிக்கு இளைய தளபதி அளித்த இன்ப அதிர்ச்சி..!


சினிமாவில் தன்னை கவர்ந்த நல்ல விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்தோ அல்லது நேரில் பார்க்கும்போதோ மனம் விட்டு பாராட்டும் இயல்புடையவர் இளையதளபதி விஜய்.. அப்படித்தான் மலையாளத்தில் வெளியாகி, சென்னையில் 250 நாட்களை தொட்டு இன்னும் ஓடிக்கொண்டு இருக்கும் ‘பிரேமம்’ படத்தையும் விரும்பி பார்த்துள்ளார்..

படமும் அதில் கதாநாயகனாக நடித்துள்ள நிவின்பாலியின் யதார்த்த நடிப்பும் விஜய்யை ரொம்பவே கவர்ந்துவிட, நிவின்பாலியை தனது அலுவலகத்திற்கு நேரம் இருந்தால் வரமுடியுமா என கேட்டு தகவல் அனுப்பினார்.. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்டார்.. அவரிடமிருந்து அழைப்பு என்றதும், தான் மலையாளத்தில் ஒரு முன்னணி நடிகர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு ஒரு ரசிகராக விஜய்யை சந்திக்க பறந்து வந்திருக்கிறார் நிவின்பாலி..

விஜய்யை நேரில் சந்தித்தபோது, பிரேமம் படம் பற்றியும் நிவின்பாலியின் சமீபகாலத்தில் வெளியான அவரது படங்கள் குறித்தும் பாராட்டிய விஜய் கேரளா பற்றி ரொம்பவே சிலாகித்து பேசினாராம். எவ்வவளவு பெரிய நடிகர் விஜய்.. ஆனால் எளிமையாக காட்சி தரும் அவருடன் அமர்ந்து பேசிய அந்த சந்தோஷ தருணங்கள் மறக்கமுடியாதது என தனது மகிழ்ச்சியை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நிவின்பாலி.

Actor Nivin PauleyActor VijayPremamThalapathiVijay