ஒரே நேரத்தில் ரஜினிகாந்த்-விஜயகாந்த் ஆக மாறும் விஜய்சேதுபதி..!  

நானும் ரௌடி தான் படம் ஹிட்டான நேரம் விஜய் சேதுபதியின் பாதையில் இருந்த தடைக்கற்கள் விலகி பயணம் சீராகிவிட்டது.. தற்போது ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில்‘சேதுபதி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. விஜயகாந்த் டைட்டிலை பிடித்தது போல,அவரைப்போலவே அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

 

இன்னொரு பக்கம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சீனுராமசமியின் இயக்கத்தில் தர்மதுரை என்கிற படத்தில் நடிக்கிறார். இந்தமுறை ரஜினி பட டைட்டிலை கைப்பற்றியதோடு படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வித்தியாசமாகவே இருக்கிறது. கூடவே தமன்னாவையும் தனக்கு ஜோடியாக சேர்த்துக்கொண்டுள்ளார்.  ஆக ஒரே நேரத்தில் ரஜினிகாந்த்-விஜயகாந்த் டைட்டிலை கைப்பற்றிய பெருமைக்காரர் ஆக மாறியுள்ளார் விஜய்சேதுபதி.

DharmaduraiRajinikanthSethupathiThamannahVijay SethupathiVijayakanth