டி.எஸ்.பியின் இசைப்பயணத்துக்கு இளையதளபதி வாழ்த்து..!

இது எந்த சிட்டியோட டி.எஸ்.பி, சுற்றுப்பயணம் போகிறார்.. அதுவும் இசைப்பயணம்.. அதற்கு நம் இளையதளபதிகூட வாழ்த்துச் சொல்கிறாரே.. என குழம்பவேண்டாம்.. “டாடி மம்மி வீட்டில் இல்ல” என கொண்டாட்டம் போடவைக்கும் பாடலை விஜய்க்கு தந்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்குத்தான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விஜய்.

விஷயம் இருக்கிறது.. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்காக வரும் ஜூலை-13 அமெரிக்காவிலும் ஆகஸ்ட்-9 கனடாவிலும் என இரண்டு இடங்களில் பிரமாண்டமான இசைநிகழ்ச்சி நடத்த இருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத். இதில் சிறப்பம்சமாக பல அமெரிக்க இசைக்கலைஞர்கள் தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைக்க, சில ஹாலிவுட் நடனக்கலைஞர்களும் அதில் ஆட இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக முதன்முதலாக ஒரு விளம்பர பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். இதில் புதிய முயற்சியாக இசை நிகழ்ச்சி பற்றிய முழு விபரங்களையும் வெறுமனே விளம்பரங்களாக இல்லாமல் பாடலுக்காக எழுதும் எழுத்து உருவில் மாற்றி அதற்கு மெட்டமைத்து இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த விளம்பரப்பாடலை இளைய தளபதி விஜய் வெளியிட்டார். எதிர்பாராத வகையில் முற்றிலும் புதிய விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப்பாடலைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஜய் டி.எஸ்.பிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இந்தப்பாடலை இணையதளத்தில் பார்க்க வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்..

https://www.youtube.com/watch?v=SuGoWKtPIiU

Devi Sri PrasadDSPillayathalapathyVijayஇளையதளபதிடி.எஸ்.பிவிஜய்