நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை! – அதிர்ச்சியில் தமிழ் சினிமா

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் சாரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, பிறகு ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது சுமார் 3-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி சென்னை டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர்.

தற்கொலை செய்துகொண்ட சாரா, கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சம்பாம், சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

actor and music director vijay antony daughter deathvijay antony daughter saaraa suicidevijay antony daughters suicide