“கண்ணியம் தவறக்கூடாது” ; ரசிகர்களுக்கு விஜய்யின் புதிய உத்தரவு..!

கடந்த சில தினங்களுக்கு முன் பெண் பத்திரிகையாளர் ஒருவர், விஜய்யின் சுறா படத்தை பார்த்துவிட்டு, தான் இடைவேளையிலேயே வெளியே வந்துவிட்டதாக கூறி படத்தை கிண்டலடித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்.. ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள் அந்த பெண் மீது நாகரிகமற்ற முறையில் வசைபாடி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினே இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை சீரியசானது..

இதை கேள்விப்பட்ட விஜய், தனது ரசிகர்களுக்கு அறிவுரையுடன் கூடிய உத்தரவு ஒன்றை அறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.. யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்..

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்..”

இவ்வாறு விஜய் கூறியுள்ளார். விஜய்யின் இந்த கருத்தை வரவேற்று சம்பந்தப்பட்ட பெண் நிருபர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

MersalVijayமெர்சல்விஜய்விஜய் ரசிகர்கள்