“டைட்டிலை மாற்றச்சொல்ல சென்சாருக்கு அதிகாரம் இல்லை” ; இயக்குனர் வாராகி

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது சிக்கலையும் இழுத்துவிட்டுள்ளது. ஆம்.. இந்தப்படத்தின் டைட்டிலையே தூக்குங்கள் என கூறி, தயாரிப்பாளரும் இயக்குனருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள்..

அங்கிருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி வந்ததுடன் படத்தின் மைய கதாபாத்திரங்களான சிவா, புஷ்பா ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்களை மாற்றச்சொல்லி இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார்கள். இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டுசெல்வதற்காகவும் சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வாராகி. ..

சிவா, புஷ்பாங்கிற பெயர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பெயர்களா என்ன..? இல்லை இந்த பெயர்களை மாற்றுங்கள் என யாரவது புகார் கொடுத்தார்களா..?.. அட அப்படியே வக்கிரம் பிடித்த பெயராக இருந்தால் கூட, அவர்கள் சொல்வது நியாயம் என சொல்லலாம். இருட்டு அறையில் முரட்டு குத்துன்னு ஒரு படம் வந்துச்சு.. இப்போ அடுத்ததா பல்லுப்படாம பார்த்து செய்யுங்கன்னு ஒரு படம் வரப்போகுது….இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சென்சார் அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன..? அவற்றையே அனுமதித்த சென்சார் அதிகாரிகள் என் படத்தின் டைட்டிலை மாற்றச்சொல்லும் காரணம் என..?

சென்சார் விதிகளின்படி டைட்டிலை மாற்றச்சொல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரமில்லை… என்னோட படத்தோட டீசர் ‘சிவா மனசுல புஷ்பா’ எனும் பெயரில்தான் சென்சாரில் இருந்து சர்டிபிகேட் வாங்கினேன்.. அப்போது தவறாக தெரியாத ‘சிவா மனசுல புஷ்பா’ பெயர் இப்பொழுது தவறாக தெரிவதால்தான் எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் கடந்த பல வருடங்களாக பல விஷயங்களில் சமூக நோக்கோடு வழக்கு தொடர்ந்து வருவதால் தற்போது இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உண்டாகிறது” என கூறினார் வாராகி.

siva manasila pushpavaaragiவாராகி