லைக்கா பில்டிங்கில் உள்ளே நுழைந்த உதயநிதி..!

விஜய்யின் ‘கத்தி’ படத்தை தயாரித்ததை தொடர்ந்து இந்த இரண்டு வருட காலங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்கும் அளவுக்கு கிடுகிடுவென வளர்ச்சி கண்டுள்ளது லைக்கா நிறுவனம். தற்போது தனுஷ், விஜய் ஆண்டனி ஆகியோரின் படங்களையும் தயாரித்து வருகிறது இந்த நிறுவனம்.

சமீப நாட்களாக தங்களைப்பற்றி வெளியான அவதூறு செய்திகளை அடியோடு மறுத்துள்ள இந்த நிறுவனம், அடுத்ததாக உதயநிதி நடிக்கும் படத்தையும் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.. இந்தப்படத்தை தூங்கா நகரம் மற்றும் சிகரம் தொடு படங்களை இயக்கிய கௌரவ் இயக்கவுள்ளார்.

GowravLycaUdhayanidhiஉதயநிதிலைக்கா