வெள்ள நிவாரண நிதி திரட்டல் துவக்கம் : 25 லட்சம் கொடுத்தார் சூர்யா..!


கனமழையால் கடலூர், சென்னை மற்றும் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நடிகர்சங்கம் சார்பில் நிதி திரட்டும் பணி துவங்கியது. இதில் சூர்யா, கார்த்தி இருவரும் தங்கள் தரப்பு நிதியாக 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். கடந்த முறை ஆந்திரா மக்கள் புயலால் பாதிக்கப்பட்டபோதும் இதே அளவில் நிதி வழங்கி உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வர்கள் தவிர விஷால் பத்து லட்சமும் தனுஷ் ஐந்து லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்கள்.. இதுபோல மற்ற உறுப்பினர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் இவையனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

DhanushKarthiNasarSivakumarSuryaVishal