பசுமை ஆவடியுடன் கைகோர்த்து களமிறங்கிய சூர்யா..!

கடந்த ஒரு மாதமாகவே சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பில் இடைவிடாது கலந்துகொண்ட சூர்யாவுக்கு இடையே படைப்பிலிருந்து சில நாட்கள் ஓய்வு கிடைத்தது. ஆனால் ஓய்வு கிடைத்துவிட்டதே என ஒரு சிலரைப்போல பொழுதை ஜாலியாக கழிக்கும் எண்ணம் தான் சூர்யாவுக்கு இல்லையே..

சில தினங்களுக்கு முன் ஆவடி பகுதியில் முகாமிட்ட சூர்யா, அங்கு நகரெங்கும் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை அகற்றும் முயற்சியை துவங்கி வைத்தார். அதுமட்டுமல்ல சுத்தம் செய்த இடங்களில் மறக்கன்ருகளையும் நட்டுவைத்துள்ளார்.. பசுமை ஆவடி என்கிற திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஆவடியை பசுமை நகரமாக மாற்றும் முயற்சிக்கு தோள் கொடுத்திருக்கும் சூர்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

S 3Singam 3Suriyaஎஸ் 3சூர்யா