ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சூர்யா…!

சூர்யா நடித்த ‘24’ படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. டைம் மிஷின் என்கிற குழப்பமான கான்செப்ட் தான் என்றாலும் எந்தவித திகட்டலும் தெளிவாக திரைக்கதை அமைத்து ரசிகர்களுக்கு குழப்பம் வராத வகையில் படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் விக்ரம் குமார்..

இந்தப்படத்திற்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக மூன்று வேடங்களில் நடித்துள்ள சூர்யாவை தெலுங்கு ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள் என்பதை வந்துகொண்டு இருக்கும் வசூல் நிலவரங்கள் சொல்லாமல் சொல்கின்றன.

இந்தநிலையில் தனது படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு ட்விட்டர் தளம் மூலமாக தனது நன்றியை தெரிவித்துள்ளார் சூர்யா. “உங்களுக்காக எங்கள் இதயத்தில் இருந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்.. இந்தப்படத்தை விரும்பிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார் சூர்யா.

24FansSuriyaசூர்யாரசிகர்கள்