‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் எழுதிய பாடலை பாடினார் சிம்பு..!

‘அனேகன்’ படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி’ பாடலை எழுதி அதன்மூலம் ஒரே பாடலில் புகழ்பெற்றவர் ரோகேஷ்.. அதன்பின் அஜித்திற்கு ‘ஆலுமா டோலுமா’ பாடலை எழுதிக்கொடுத்து பட்டி தொட்டியெல்லாம் ஜுரம் பிடிக்க வைத்தார்.. இப்போது லேட்டஸ்டாக விக்ரம்பிரபு நடித்துவரும் ‘வீரசிவாஜி’ படத்தில் ‘தாறுமாறு தக்களிச்சோறு’ என்கிற பாடலை எழுதியுள்ளார்..

இந்தப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.. பொதுவாக தனது படம் மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களிலும் தாராள மனதுடன் பாடி வரும் சிம்புதான் இந்தப்பாடலையும் பாடியுள்ளார். ரோகேஷின் முந்தைய பாடல்களைப்போல இந்தப்பாடலும் ஹிட்டாகும் என இப்போதே சத்தியம் செய்கிறார்கள் படக்குழுவினர்..

RokeshSimbuசிம்புரோகேஷ்