விஜய்சேதுபதி தனது பெயரிலேயே நடித்துள்ள படம் தான் ‘சேதுபதி’.. முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக இதில் நடித்துள்ளார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் அருண்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். நேற்று இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.. இதில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் பேசியது தான் விழாவின் ஹைலைட்டே..
“‘ஜிகர்தண்டா’ படத்தை முடித்ததும் கார்த்திக் சுப்புராஜிடம் அடுத்த படம் பண்ணலாம் என கேட்டேன்.. இல்ல ஜி, என் முதல் பட ஹீரோ விஜய்சேதுபதியை வச்சு அடுத்த படம் பண்றேன்னு சொன்னார்..இதே மாதிரி தான் ‘சூதுகவ்வும் படம் வெளியானதும் அந்தப்படத்தோட இயக்குனர் நலன் குமாரசாமிகிட்ட, அசத்திட்டீங்க பாஸ்.. நம்ம ரெண்டுபேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் பாஸ் அப்படின்னா, அவரும் இல்லைங்க விஜய் சேதுபதியை வச்சுத்தான் அடுத்த படம் பண்றேன் அப்படின்னு சொல்றார்.
சரி.. ‘பண்ணையாரும் பத்மினியும்’ அருண்குமார்கிட்ட, அந்தப்படம் முடிஞ்சதுமே நாம எப்ப சேர்ந்து பண்ணலாம்னு கேட்டா, அவரும் அடுத்த படத்தையும் என் முதல் பட ஹீரோவை வச்சே பண்ணப்போறேன்னு சொல்லி இதோ ‘சேதுபதி’யை முடிச்சுட்டு நிக்கிறாரு.. நான் ஒருதடவை விஷால்கிட்ட பேசுறப்ப கூட சொன்னேன்.. பேசாம விஜய்சேதுபதிக்குன்னு தனியா ஒரு நடிகர்சங்கம் ஆரம்பிங்க.. அவரு பட பஞ்சாயத்தே பெரிசா இருக்கு… தன்னோட முதல் பட டைரக்டர் யாரையும் வெளில போகவிடாம வச்சுக்கிறாரு’ன்னு கலாட்டவாக்கூட சொன்னேன்.. இனி வர்ற நாட்கள்லயாவது எங்கபக்கமும் அவரோட டைரக்டர்களை கொஞ்சம் அனுப்பி வச்சா நாங்களும் எதோ ஒண்ணு ரெண்டு ஹிட் கொடுத்துக்குவோம்” என் விஜய்சேதுபதியை புகழ்ந்து தள்ளிவிட்டார் சித்தார்த்..