மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணலாம் என சித்தார்த் நினைத்துவிட்டார் போலும்.. அதிலும் ஜன-29ல் வெளியான அரண்மனை-2வை தொடர்ந்து, வெறும் 13 நாட்கள் இடைவெளியில் தனது ‘ஜில் ஜங் ஜக்’ படத்தை வரும் பிப்-12ஆம் தேதி வெளியிடுகிறார்.. தீரஜ் வைத்தி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே..
ஒரு ஹீரோயின் உள்ள படங்களில் கூட எப்படியாவது இன்னொரு ஹீரோயினை நுழைத்துவிடும் இந்த காலகட்டத்தில் இந்தப்படத்தில் கதாநாயகியே இல்லை என்பது ஆச்சர்யம் தான்.. “கதாநாயகி இல்லாமலும் படம் ஓடும் என்பதை நிரூபிக்கத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் கதை மேல் உள்ள நம்பிக்கை தான்” என்கிறார் சித்தார்த்.