“கட்டப்பாவ காணோம்” ; சிபிராஜின் புதிய தேடல்..!


பாகுபலி’ படத்தின் மிக முக்கியமான கதையின் திருபத்திற்கு காரணமான கேரக்டர்தான் சத்யராஜ் ஏற்று நித்த கட்டப்பா கதாபாத்திரம்.இன்னும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் வெளிவராத நிலையில் கட்டாபா ஏன் பாக்பளியை குத்தினார் என்கிற மில்லியன் டாலர் கேள்வி கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது..

இது ஒருபக்கம் இருக்க, ‘ஜாக்சன் துரை’ படத்தை முடித்துவிட்ட சிபிராஜ், அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘கட்டப்பாவ காணோம்’ என வித்தியாசமான பெயரை சூட்டியுள்ளார்கள்.. பெயரளவில் தான் ‘கட்டப்பா’வை பயன்படுத்தி உள்ளார்களே தவிர ஒரிஜினல் கட்டப்பா கேரக்டருக்கோ அதை ஏற்று நடித்த சத்யராஜுக்கோ எந்த களங்கமும் வராமல் தங்கள் படம் இருக்கும் என உறுதியும் அளித்திருக்கிறார் படத்தின் இயக்குனரான மணி செய்யோன்.. இவர் இயக்குனர் அறிவழகனின் சிஷ்யர் ஆவார்..

சிபிராஜுக்கு ஜோயியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, முக்கிய வேடங்களில் சாந்தினி, காளி வெங்கட், யோகிபாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்குனர் நலன் குமாரசாமி இந்தப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்து போல, இந்தப்படத்தில் செல்லப்பிராணியாக மீன் ஒன்று நடிக்க இருக்கிறதாம்.

KaaliShandhiniSibirajYogi BAbu