தங்களது வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்த நிலையிலும் தவித்த வாய்க்கு தண்ணீருக்காக ஏங்குவது மிகப்பெரிய கொடுமை.. இந்த மழைவேள்ளத்தின்போது சென்னைவாசிகள் அந்த கொடுமையான நிலையை சந்தித்தார்கள்.. அதனால் தான் விவாரண பொருட்கள் வழையவர்களின் பட்டியலில் தண்ணீர் பாட்டில் முதலிடம் பிடித்தது.
நடிகர் மயில்சாமி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவந்தபோது தண்ணீர் பாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக திருவண்ணாமலையில் இருந்து எண்பதாயிரம் ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்களை வரவழைத்தாராம்..
இதற்காக நடிகர் சத்யராஜை சந்தித்து உதவி கேட்கபோனபோது உடனே 5௦ ஆயிரம் ரூபாயை தூக்கி மயில்சாமியிடம் கொடுத்தாராம் சத்யராஜ். ஏற்கனவே மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு அவரும் அவரது மகன் சிபிராஜும் இரண்டேகால் லட்ச ரூபாய் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.